உணவுத் தயாரிப்பு என்பது ஒரு கலை. உணவின் சுவை மட்டுமன்றி, சுத்தம், தரம் என அனைத்தும் முக்கியம். சிறு சிறு உணவகங்களில், கண் முன்னே உணவுகள் தயாரிப்பதைப் பார்க்க முடியும். ஆனால், பெரிய உணவகங்களில் இருந்து பெறப்படும் உணவுகளின் சுவையை மட்டும் கொண்டாடித் தீர்க்கிறவர்கள், அந்த உணவு சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதைச் சிந்திக்க மறந்துவிடுகிறார்கள்.
இது போன்ற ஒரு நிகழ்வுதான் பெங்களூருவில் உள்ள டோமினோஸின் பீட்சா தயாரிக்கும் உணவகம் ஒன்றில் நிகழ்ந்துள்ளது. பீட்சா தயாரிக்க பிசைந்து வைக்கப்பட்ட மாவு வைக்கப்பட்டிருந்த டிரேய்க்கு மேலே, தரையைச் சுத்தம் செய்யும் மாப்கள், அங்கு வேலை செய்பவர்களின் துணிகள் என அனைத்தும் டிரேயில் படும்படி தொங்கவிடப்பட்டுள்ளன.