டி20 உலகக் கோப்பை (2007), ஒருநாள் உலகக் கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. தோனியின் தலைமையில் தான் இந்தியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் முதலிடத்தை எட்டியது.
An Indian icon watching on 🇮🇳#Wimbledon | @msdhoni pic.twitter.com/oZ0cNQtpXY
— Wimbledon (@Wimbledon) July 6, 2022
2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடக்க T20 உலகக் கோப்பையில் ஒரு இளம் கேப்டனாகவெற்றிக்கு அழைத்துச் சென்றபோது அவரது கேப்டன்சி வாழ்க்கை புகழ்பெறத் தொடங்கியது. அவர் விளையாட்டின் மிகவும் விரும்பத்தக்க கேப்டன்களில் ஒருவராக ஆனார்.
தோனியின் கீழ், இந்தியா 72 டெஸ்ட் போட்டிகளில் 41 போட்டிகளையும், 200ல் 110 ODI போட்டிகளையும், 60ல் 27 T20I ஆட்டங்களையும் வென்றது. பேட்டிங் முன்னணியில், 2004 முதல் 2019 வரையிலான தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் 17,226 ரன்கள் குவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு , 2019 உலகக் கோப்பையில் அணி அரையிறுதியில் வெளியேறியதன் மூலம், அவர் இந்தியாவுடனான தனது புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வு மூலம் நிறைவளித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.