ஓரின சேர்க்கையாளர்களை எப்போதும் வாட்டும் ‘அந்த பயம்’ அவசியமா?

Share

ஓரின சேர்க்கையாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

“நான் என் பார்ட்னருடன் வாழ்கிறேன். ஒரு நாள் கூட பயத்தின் நிழல் இல்லாமல் கழிந்ததில்லை. ஓரின சேர்க்கை குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ‘அலிகர்’ என்ற திரைப்பத்தில் காட்டியது போல யாராவது வீட்டிற்குள் நுழையக்கூடும் என்ற அச்சம் இருக்கிறது. ஏழாண்டு சிறை தண்டனை கிடைப்பதான கனவுகூட எனக்கு வருவதுண்டு.”

கடந்த 18 ஆண்டுகளாக மும்பையில் தனது துணையுடன் வசிக்கும் டாக்டர் பிரசாத் ராஜ் தாண்டேகர் கூறிய வார்த்தைகள் இவை.

தனது துணையைப் பற்றி குடும்பத்தினருக்கு தெரியும் என்றாலும்கூட தங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பயம் 24 மணி நேரமும் தன்னை அச்சுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

“ஆவணங்களின்படி என் பார்ட்னர் என்னுடைய நண்பர். நான் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ, அவர் எனக்காக எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஏனென்றால் அவருக்கு சட்டப்பூர்வ உரிமைகள் இல்லை. நான் அவருடன் இவ்வளவு காலம் வாழ்ந்திருந்தாலும்கூட இதுதான் உண்மை. நான் விரும்பும் நபர் என்னை கவனித்துக் கொள்ள வேண்டும், என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் என் துணைக்கு அந்த அங்கீகாரம் இல்லை,”என்று அவர் குறிப்பிட்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com