சென்னை: திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: கடந்த மாதம் 9ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவர் பூத் கமிட்டி அமைத்திட வேண்டும் என்று அறிவித்ததன் அடிப்படையில், முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டக் கழகச் செயலாளரும், தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர் பட்டியலை தயார் செய்து வரும் 10ம் தேதிக்குள் தலைமை கழகத்துக்கு அனுப்பி வைத்திட வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் வாக்குச்சாவடி முகவர் அந்தந்த வாக்குச்சாவடியில் குடியிருப்பவராகவும் வாக்குச்சாவடி குறித்து முழுமையாகத் தெரிந்தவராகவும் களப்பணி செய்பவராகவும் இருத்தல் வேண்டும்.மாவட்டக் கழகச் செயலாளர்கள், இப்பணியை நிர்வாகிகளிடம் ஒப்படைத்து, அவர்களிடமிருந்து பெறப்பட்ட பட்டியலை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் வாக்குச்சாவடி முகவர் பட்டியல் தலைமைக் கழகத்தால் சரிபார்க்கப்பட்டு தலைவரின் பார்வைக்கு வைக்கப்படும். இவ்வாக்குச் சாவடி முகவர் நியமிக்கும் பணியினை விரைந்து முடித்து வரும் 10ம் தேதிக்குள் தலைமைக் கழகத்திற்கு அனுப்புதல் வேண்டும்.