அதைத் தொடர்ந்து, அவரின் முகம் மற்றும் உடலின் பிற பாகங்களிலும் சரும வெடிப்பும், கொப்புளங்களும் உருவாகி உள்ளன. அறிகுறியின் தீவிரத்தால் பயந்த நபர், விரைந்து மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் தொற்றுநோய் பிரிவில் பரிசோதனை செய்யப் பரிந்துரைக்கப்பட்டார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், உடலின் பல பகுதிகளிலும், அந்தரங்க பகுதிகளிலும் சரும புண்கள், புள்ளிகள் இருப்பது தெரியவந்தது. அதோடு கல்லீரல், மண்ணீரல் மற்றும் நிணநீர் கணுக்களும் சற்று வீங்கியிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. பரிசோதனையில், அவர் குரங்கு அம்மை மற்றும் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. அவருக்கு கோவிட்-19 மற்றும் குரங்கு அம்மைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, ஒரு வாரம் கழித்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்றுக்கான சிகிச்சை தொடங்கப்பட்டது.
நோயாளியின் இந்த அறிக்கையானது, Journal of Infection என்ற இதழில் ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியானது. இந்த நோயாளியின் பாதிப்பானது, குரங்கு அம்மை மற்றும் கோவிட் 19 போன்ற நோய் அறிகுறிகள் எப்படி ஒன்றோடு ஒன்று சேர்ந்து வருகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர் இரண்டு டோஸ் ஃபைஸரின் எம்ஆர்என்ஏ கோவிட் தடுப்பூசியை (Pfizer’s mRNA) செலுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.