இந்தியாவின் பல மாநிலங்களில் கோர்பா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் ஒரேநாளில் 89 பேர் குடைமடைந்துள்ளனர். தற்போது வரை சுமார் 689 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்மாக சென்னையில் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 83.6 சதவிகிதம் XBB வகையை சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் தொடக்கத்திலும் இதேவகை வைரஸ் தான் தமிழகத்தில் அதிகம் கண்டறியப்பட்டது. தற்போது மீண்டும் அதே வைரஸ் அதிகமாகி பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நிலவும் கொரோனா பரவலை பற்றி பேசியுள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியன், “இந்த வைரஸ் அதிகம் பாதிப்பை கொடுக்காது. இருந்தாலும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும் மருத்துவமனைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் போன்றவற்றில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.
ஜனவரி மாதங்களில் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று கொரோனா பாசிட்டிவ் கேஸ்களே பதிவான நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை நாளொன்றுக்கு 100 என அதிகரித்துள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குச் செய்யப்படும் சோதனையின்போது மூன்று, நான்கு நாள்களில் யாருக்கேனும் ஒருவருக்கே கொரோனா இருக்கும். ஆனால் தற்போது குறைந்தது ஆறு பேராவது கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.