உருளைக்கிழங்கு நம்மில் பலருக்கும் பிடித்த ஒன்று. இதை எப்படி சமைத்தாலும், சப்புக்கொட்டி சாப்பிடுவோம். அப்படி, சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கை வைத்து மஞ்சூரியன் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு – 3.
மைதா – 1/4 கப்.
சோள மாவு – 2 ஸ்பூன்.
எள்ளு எண்ணெய் – 2 ஸ்பூன்.
பூண்டு – 2 ஸ்பூன் பொடியாக நறுக்கியது.
இஞ்சி – 2 ஸ்பூன் பொடியாக நறுக்கியது.
வெங்காயம் – 1 நறுக்கியது.
குடைமிளகாய் – 1/2 நறுக்கியது.
உப்பு – தேவையான அளவு.
மிளகு தூள் – சிறிது.
மிளகாய் தூள் – ½ ஸ்பூன்.
சோயா சாஸ் – 1 ஸ்பூன்.
வினிகர் – 1/2 ஸ்பூன்.
ரெட் சில்லி சாஸ் – 1 1/2 ஸ்பூன்.
டொமேட்டோ கெட்சப் – 2 ஸ்பூன்.
வெங்காயத்தாள் – சிறிது.
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :
முதலில், எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை நன்றாக கழுவி, தோலை நீக்கி சம அளவு துண்டுகளாக நறுக்கவும்.
உருளைக்கிழங்கின் நிறம் மாறாமல் இருக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில், நறுக்கிய கிழங்கை போட்டு வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து 10 நிமிடம் வேகவைக்கவும்.
இப்போது, ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் வேகவைத்த உருளைக்கிழங்கை மாவு கலவையில் தோய்த்து ஒவ்வொன்றாக
போடவும்.
Also Read | சண்டே ஸ்பெஷல் காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன் செய்வது எப்படி?
பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
இதை தொடர்ந்து, ஒரு அகலமான பானில், எள் எண்ணெய், பூண்டு, இஞ்சி மற்றும் வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
அடுத்து உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும். இப்போது, தீயை சிம்மில் வைத்து அதில் சோயா சாஸ், வினிகர், ரெட் சில்லி சாஸ், டொமேட்டோ கெட்சப் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பிறகு வறுத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து கலந்து விடவும். இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கலந்து விட உருளைக்கிழங்கு மஞ்சூரியன் ரெடி!.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.