ஒரு மாதத்திற்கு எண்ணெய் உணவுகளை தவிர்த்தால் என்ன ஆகும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

Share

இந்தியாவில் பெரும்பாலான உணவுகள் ரீஃபைண்ட் ஆயில் பயன்படுத்தி செய்யப்பட்டவைகளாக உள்ளது. இதன் சம நிலையான சுவை, வெப்பத்தை தாங்க கூடிய தன்மை காரணமாக இது சமையலில் பயன்படுத்தப்படுகிறது. எனினும், ரீஃபைண்ட் ஆயிலை அதிகப்படியாக சாப்பிடுவதால் நமது உடல் நலத்திற்கு எண்ணிலடங்கா தீங்குகள் ஏற்படுகிறது. உடற்பருமன், இதய நோய் மற்றும் பல நோய்களுக்கு காரணமாக அமையும் வீக்கம் போன்றவை ரீஃபைண்ட் ஆயில் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய சில பிரச்சனைகள்.

எனவே ஒருவர் முற்றிலுமாக ரீஃபைண்ட் ஆயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா? மேலும் திடீரென்று ரீஃபைண்ட் ஆயில் சாப்பிடுவதை ஒரு மாதத்திற்கு நிறுத்தி விட்டால் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொரிக்கப்படும் உணவுகள் மற்றும் ப்ராசஸ் செய்யப்படும் உணவுகளில் பயன்படுத்தப்படும் ரீஃபைண்ட் ஆயில்களில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிக அளவில் இருப்பதால் உடல் எடை அதிகரிப்பு, வீக்கம் மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் ஆகியவை அதிகரிக்கிறது. எனவே இது போன்ற எண்ணெய்களை நமது உணவில் இருந்து அகற்றுவது நமது ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பதோடு, வீக்கத்தை குறைத்து உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு உதவுகிறது.

ரீஃபைண்ட் ஆயிலை தவிர்ப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம் : 

  • மேம்படுத்தப்பட்ட இதய ஆரோக்கியம்: ரீஃபைண்ட் ஆயில்களில் டிரான்ஸ்ஃபேட் மற்றும் சேச்சுரேட்டட் ஃபேட் அதிக அளவில் இருப்பதால் இவற்றை நாம் சாப்பிடும் பொழுது, நமக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது. இந்த எண்ணெய்களை தவிர்ப்பது நமது உடலின் கொலஸ்ட்ரால் அளவுகளை சீராக வைத்து இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதை குறைக்கிறது.
  • சரியான எடை பராமரிப்பு: ரீஃபைண்ட் ஆயில்களில் கலோரிகள் அதிகமாக உள்ளது. எனவே இவற்றை குறைந்த அளவில் சாப்பிடுவதால் நாம் உட்கொள்ளக்கூடிய கலோரிகள் குறைகிறது. இது உடல் எடையை குறைப்பதற்கு வழிவகுக்கும்.
  • ரத்த சர்க்கரை அளவுகளை பராமரிக்கிறது: ரீஃபைண்ட் ஆயில்கள் இன்சுலின் உணர்திறனை பாதிக்கலாம் என்பதால் இந்த எண்ணெயை தவிர்ப்பதன் மூலமாக நமது ரத்த சர்க்கரை அளவுகளை சீராக பராமரித்து கொள்ளலாம்.
  • தெளிவான சருமம்: ரீஃபைண்ட் ஆயில்களை முற்றிலுமாக தவிர்த்தல் அல்லது அதன் பயன்பாட்டை குறைத்த நபர்கள் சிலருக்கு சருமத்தில் நல்ல முன்னேற்றம் இருந்ததாக கூறுகின்றனர். வீக்கம் மற்றும் சரும பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய இந்த எண்ணெய்களை குறைப்பதன் மூலமாக தெளிவான சருமத்தை பெறலாம்.
  • செரிமானம் சார்ந்த பலன்கள்: அதிக அளவு ப்ராசஸ் செய்யப்பட்ட எண்ணெய்களை சாப்பிடுவது ஒரு சிலருக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே செரிமானத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் இந்த எண்ணெயை தவிர்ப்பது நல்லது.

எனினும் ஒருவர் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், ரீஃபைண்ட் எண்ணெய்களை தவிர்த்த பிறகு ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதுதான். சீரான உணவை பின்பற்றுவதற்கு அவகாடோ, நட்ஸ், விதைகள் மற்றும் கொழுப்பு மீன்கள் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம்.

தொடர்ந்து ஒரு மாதத்திற்கு ரீஃபைண்ட் ஆயில் சாப்பிடுவதை தவிர்க்கும் சோதனைகளில் ஈடுபடுவது நல்லது தான் என்றாலும் கூட, எந்த ஒரு உணவு மாற்றத்தை செய்வதற்கு முன்பும் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியமாக கருதப்படுகிறது. மேலும் ரீஃபைண்ட் ஆயில்களுக்கு பதிலாக நீங்கள் வேறு என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற யோசனையும் உங்களது அன்றாட ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவும்.

ரீஃபைண்ட் ஆயிலுக்கு பதிலாக வேறு என்ன ஆரோக்கியமான எண்ணெய்களை பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம் : 

  • ஆலிவ் எண்ணெய்: எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆயில் எண்ணெயில் மோனோ அன்சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.
  • அவகாடோ எண்ணெய்: மோனா அன்சாச்சுரேட்டட் ஃபேட்களின் மற்றொரு மூலம் அவகாடோ எண்ணெய். அதிக வெப்ப நிலையில் சமைப்பதற்கு இந்த எண்ணெய் ஏற்றது.
  • தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள் (MCT) மற்றும் தனித்துவமான சுவையைக் கொண்டுள்ளது. மிதமான வெப்ப நிலையில் சமைப்பதற்கு இந்த எண்ணெய் ஏற்றது.
  • நட்ஸ் மற்றும் விதை எண்ணெய்கள்: வால்நட் ஆயில், ஃபிளாக்ஸ் சீட் ஆயில் மற்றும் நல்லெண்ணெய் போன்றவை அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலங்கள். எனினும் இந்த எண்ணெய்களை அதிக வெப்ப நிலையில் சமைக்க முடியாது.
  • வெண்ணெய் அல்லது நெய்: பால் சார்ந்த பொருட்களை சாப்பிடும் நபர்களுக்கு வெண்ணெய் அல்லது நெய் ஏற்றதாக அமையும். இது உணவுக்கு தனித்துவமான சுவையையும் சேர்கிறது.
  • நட்ஸ் பட்டர்: பாதாம் வெண்ணெய் அல்லது வேர்க்கடலை வெண்ணெய் போன்றவற்றை பிரட்டுகளில் பரப்பி சாப்பிடுவதற்கும் அல்லது வேறு சில ரெசிபிகளை செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

Also Read | கடலை எண்ணெய் சமையலுக்கு நல்லதா..? பகீர் உண்மைகளை வெளியிடும் நிபுணர்கள்..!

ஒட்டு மொத்தமாக சமச்சீரான உணவை பின்பற்றுவது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். கொழுப்புகளை முற்றிலுமாக நமது உணவில் இருந்து நீக்கி விடாமல், அதற்கு பதிலாக ஆரோக்கியமான கொழுப்புகளை நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com