இங்கிலாந்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இவர் தன்னை ஒரு `பிரிட்டிஷ் சீக்கிய பெண் பவர் லிஃப்டர்’ என அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
கின்னஸ் உலக சாதனையைப் படைத்த பின்னர், கரன்ஜீத் கவுர் பேசுகையில், “கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பவர் லிஃப்ட்டிங்கில் கிரேட் பிரிட்டனைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பிரிட்டிஷ் சீக்கிய பெண் என்ற பெருமையோடு மட்டுமல்லாமல், அதிகாரபூர்வமாக உலக சாதனையாளராகவும் வரலாற்றில் முத்திரை பதித்துள்ளேன்.
சாதனையை முறியடிப்பது நம்ப முடியாத ஓர் உணர்வு. மேலும் இது புதிய தலைமுறையினருக்கு, எல்லாம் சாத்தியமே என்ற ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தருகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் கரன்ஜீத் கவுர், பவர் லிஃப்டிங் குறித்த வீடியோவை தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருகிறார். அதோடு பெண்கள் தங்கள் விளையாட்டு மற்றும் உடல்தகுதியைத் விடாமல் தொடரவேண்டும் எனவும் மோட்டிவேட் செய்து வருகிறார்.