ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்… 11 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் வெற்றிகரமாக பிரிப்பு!|11-hr-surgery to separate conjoined Iraqi twins

Share

11 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்பு, ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாகப் பிரித்தனர். இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் அல் ரபீஹ் கூறுகையில், “ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளான உமர் மற்றும் அலி, 2022 செப்டம்பர் மாதத்தில் அவர்களின் பெற்றோர்களால் ரியாத்திற்கு கொண்டு வரப்பட்டனர். குழந்தைகளின் அடி மார்பும் வயிறும் ஒட்டியிருந்தன. இருவரும் கல்லீரல், குடல் போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டனர்.

அறுவை சிகிச்சை 70 சதவிகிதம் வெற்றிகரமாக இருந்தது. ஈராக்கில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பிரிக்கும் அறுவை சிகிச்சை இங்கு ஐந்தாவது முறையாக நடைபெறுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com