ஐ.டி. துறைகளில் வேலை பறிப்பு ஊழியர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் வேண்டும்: அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

Share

சென்னை: வேலை இழப்புகளில் இருந்து ஐடி ஊழியர்களை பாதுகாக்க, ஐ.டி. துறைக்கென்று பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சட்டத்தை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென சிபிஎம் மாநிலக்குழு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது. சென்னையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று செயற்குழு உறுப்பினர் பாலபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் வாசுகி, சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: வேலை இழப்புகளில் இருந்து மென்பொறியாளர்களை பாதுகாப்பதற்கு ஐ.டி. துறைக்கென்று பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சட்டத்தை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு சிபிஎம் மாநிலக்குழு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com