ஐபிஎல் டி20: CSK vs RCB: டு பிளெசி, மேக்ஸ்வெல்லின் அதிரடியை கட்டுப்படுத்தி சென்னையை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற கேப்டன் தோனி

Share

கெய்க்வாட், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல்

பட மூலாதாரம், BCCI/ IPL

பெங்களூரு அணி சேஸிங் செய்யும் போது, 10 ஓவரின் முடிவில் 121 ரன்களை குவித்து இருந்தது. களத்தில் மேக்ஸ்மெல், டு பிளெசி ஆகியோர் அபாரமாக விளையாடிக் கொண்டு இருந்தனர்.

அந்த தருணத்தில் பெங்களூரு அணி அதே ரன்ரேட்டை தொடர்ந்து இருந்தால், சென்னையை எளிதாக வீழ்த்தி இருக்க முடியும்.

ஆனால் அடுத்து வந்த மிட் ஓவர்களில் கூலான அணுகுமுறையுடன் கச்சிதமான பீல்டிங் செட்டப்பை கொண்டு வந்து, பெங்களூருவின் முக்கிய விக்கெட்டுகளை குறிப்பிட்ட இடைவெளியில் வீழ்த்தி சென்னைக்கு வெற்றியை பெற்றுத் தர உதவியாக இருந்தார் கேப்டன் தோனி.

முதல் இன்னிங்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 226 ரன்கள் குவித்து இருந்த நிலையில், இரண்டாவதாக களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்ததால், சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com