ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தானுக்கு எதிராக திணறிய குஜராத் – இறுதிக்கட்டத்தில் காப்பாற்றிய டேவிட் மில்லர், மனோகர்

Share

குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம், BCCI/ IPL

ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களை எடுத்தது.

மிடில் ஓவர்களை வீசிய ராஜஸ்தானின் ஸ்பின் பௌலர்கள் குஜராத்தின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினர். இறுதிக்கட்டத்தில் டேவிட் மில்லர், அபினவ் மனோகர் ஆகியோரின் உதவியால் குஜராத் அணி 177 ரன்களை எடுத்தது.

குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 45 ரன்களையும் டேவிட் மில்லர் 46 ரன்களை எடுத்தனர்.

கேட்ச் பிடிப்பதில் ஏற்பட்ட குழப்பம்

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாஹா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com