ஐதராபாத் நடைபயணத்தில் ராகுலுடன் சென்ற நடிகை பூஜா பட்

Share

ஐதராபாத்: ஐதராபாத்தில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன் நடிகை பூஜா பட் பங்கேற்றார். ெதலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி, தனது இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை நேற்று 56வது நாளாக  மேற்கொண்டார். இவரது நடைபயணத்தின் ேபாது காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மாணவர்களும் ஆதரவு தெரிவித்து அவருடன் நடைபயணம் செய்கின்றனர்.

அந்த வகையில் பாலிவுட் நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளருமான பூஜா பட் நேற்று நடைபெற்ற நடைபயணத்தில் பங்கேற்றார். அவர் ராகுல் காந்தியுடன் சேர்ந்து நடைபயணம் மேற்கொண்டார். சிறிது நேரம் ராகுல் காந்தியுடன் பூஜா பட் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com