இதன் காரணமாக, தமிழ்நாட்டிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் பெண் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார். இதன் தொடர்ச்சியாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் உள்ள சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
அப்போது, இந்த முயற்சிக்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி அடுத்த முயற்சிகளுக்கான உதவிகளை தமிழக அரசு செய்வதற்கான உறுதியையும் வழங்கினார்.

வட அமெரிக்காவில் 6,144 மீட்டர் மவுண்ட் தெனாலி உயரமுள்ள என்கின்ற மலைச்சிகரத்தை ஏறி சாதனை படைத்தது குறித்து அவரிடம் தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது, “நான் ஒரு வருடத்திலேயே ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களையும் ஏறி சாதனை படைக்க முயற்சி செய்தேன். அப்படி ஒரு வருடத்தில், ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை ஏறி சாதனை படைத்தால், இந்திய அளவில் முதலிடமும், உலக அளவில் மூன்றாம் இடமும் பெறுவேன்.
தற்போது இரண்டு வருடத்தில் அந்த சாதனையைச் செய்துள்ளதால் இந்திய அளவில் முதலிடமும் தமிழகத்திலிருந்து ஏழு கண்டங்களில் உள்ள சிகரங்களிலும் ஏறிய முதல் தமிழ் பெண் எனவும் பெயர் பெற்று உள்ளேன்” எனத் தெரிவித்தார்.