ஏராளமான வெரைட்டி… என்னவொரு டேஸ்டீ; குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் கரூர் `கரம்’! | karur special snacks karam

Share

கரூர்ல கிடைக்கிற கரம்க்கு தனிச் சுவை உண்டு. கரம் கரூர்வாசிகளோட உணர்வோட கலந்திருக்கு. ’அட, கரம்ல அப்படி என்னதான் இருக்கு?’னு கேக்குறீங்களா?

கரம்ங்கிறது, ஒரு தட்டு வடை(தட்டை) மேல பீட்ரூட் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லி இதெல்லாம் வச்சு, கொஞ்சமா அதுக்கு மேலேயே தேங்காய் சட்னி, காரச் சட்னி அல்லது ஏதோ ஒரு சட்னி வெச்சு, அதுக்கு மேலேயே இன்னொரு தட்டு வடைய வச்சு சாப்பிடுறது. ஒரு குட்டி பர்கர் மாதிரினு சொல்லலாம்.

கரம் | கரூர்

கரம் | கரூர்

இது மட்டுமில்லாம, தட்டுவடைய உடைச்சி போட்டு, கொஞ்சமா பொரி, கடலை, ஏதாவது ஒரு வகை சட்னி, கேரட் அல்லது பீட்ரூட் துருவல், கொத்தமல்லி, கொஞ்சமா மிக்ஸர் போட்டு ஒரு கலக்கு கலக்கினா… அது கரம். இது கூட சம்சா சேர்த்தா சம்சா கரம், வேகவெச்ச முட்டையை கட் பண்ணி சேர்த்தா அது முட்டை கரம். இதுமட்டுமில்லைங்க… அப்பளம் கரம், அப்பளம் செட், கலக்கல் கரம், நொறுக்கல் கரம், காரப்பொரி கரம், முறுக்கு கரம்னு இன்னும் நெறைய வெரைட்டீஸ் இருக்கு. அதே மாதிரி கரம் வெரைட்டியில சேர்க்கிறதுக்கு சட்னியும் நிறைய வகையில இருக்கு. கொத்தமல்லிச் சட்னி, தேங்காய் சட்னி, காரச் சட்னி, தக்காளி சட்னினு சொல்லிக்கிட்டே போலாம்!

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com