ஹார்மோன் மாத்திரைகள் மற்றும் கருத்தடை மருந்துகள், ஹெப்படைட்டிஸ் பி, டிபிடி தடுப்பூசி, ஜப்பானிய மூளை அழற்சி நோய்க்கான தடுப்பூசி, தட்டம்மை தடுப்பூசி, ரேபிஸ் தடுப்பூசி போன்றவற்றுக்கான விலையும் அதிகரிக்கிறது.

கண் பிரச்னை சார்ந்த மருந்துகள், ஆக்ஸிடோசிக்ஸ், மனநல சிகிச்சையளிப்பதற்கான மருந்துகள், சுவாசக்குழாய் கோளாறுக்கான மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள் மற்றும் தாதுக்கள் நிறைந்த மருந்துகள், மலேரியாவை குணப்படுத்தும் மருந்துகளான ஆர்ட்சுனேட், ஆர்டெமீதர், குளோரோகுயின், கிளிண்டமைசின், குயினைன், ப்ரிமாகுயின் போன்றவையும், புற்றுநோய் சிகிச்சை மருந்துகளான ஃப்ளோரூராசில், ஆக்டினோமைசின் டி, ஆல்-டிரான்ஸ் ரெட்டினோயிக் அமிலம், ஆர்சனிக் ட்ரை ஆக்சைடு, கால்சியம் ஃபோலினேட் போன்றவையும், ரத்த சோகை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஃபோலிக் அமிலம், இரும்பு சுக்ரோஸ், ஹைட்ராக்ஸோகோபாலமின் போன்றவையும், கார்டியோவாஸ்குலர் சிகிச்சைக்கான மருந்துகளான டிலிடாசெம், மெட்டோப்ரோலால், டிகோக்சின், வெராப்ராமில், அம்லோடிபைன், ராமிபிரில், டெல்மிசார்டன் போன்றவற்றின் விலையும் அதிகரிக்கின்றன.