மேலும், அந்தக் குழந்தையின் வலது கையை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர். குழந்தையின் இந்த நிலைமைக்கு மருத்துவமனையின் அலட்சியமும், தவறான சிகிச்சையும்தான் காரணம் என்று குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்கக் குற்றம்சாட்டினார். ஒன்றரை வயதுக் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தமிழகம் எங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மருத்துவத்துறை சார்பில், சிகிச்சையில் தவறு நடந்திருக்கிறதா என்பதை விசாரணை செய்ய மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.
அந்த மருத்துவக் குழுவின் அறிக்கையிலும், “மருந்து கசிவினாலோ செலுத்தப்பட்ட மருந்துகள் காரணமாகவோ அல்லது மருத்துவர்களின் தவறான சிகிச்சையினாலோ குழந்தையின் கை அகற்றப்படவில்லை. மூளைத்தொற்று ரத்த நாளத்தைப் பாதித்ததால், குழந்தையின் வலது கையில் ரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வலது கையை காப்பாற்றுவது கடினம் என்பதாலும், குழந்தையின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலும் கை அகற்றப்பட்டிருக்கிறது” எனக் கூறப்பட்டிருந்தது.