எல்தோஸ் பால் இறுதிக்குத் தகுதி பெறும் முதல் இந்தியரானார் – News18 Tamil

Share

யூஜீனில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டிகளின் ட்ரிப்பிள் ஜம்ப் பிரிவில் எல்தோஸ் பால் இறுதிக்குத் தகுதி பெறும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

அதே போல் நீரஜ் சோப்ராவுடன் ஈட்டி எறிதலில் இறுதிக்குத் தகுதி பெற்றார் மற்றொரு இந்திய வீரர் ரோஹித் யாதவ். 80.42மீ தூரம் எறிந்து ரோஹித் யாதவ் 11ம் இடத்தில் முடிந்தார். கிரெனடாவின் ஈட்டி எறிதல் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 89.91 மீ தூரம் எறிந்து முதலிடம் பிடித்து இறுதிக்குத் தகுதி பெற்றார்.

வெப்பர் 87.28 மீ தூரம் எறிந்து இறுதிக்குள் நுழைந்தார். ட்ரிப்பிள் ஜம்ப்பில் இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் முதல் முயற்சியில் ஃபவுல் என்று அறிவிக்கப்பட்டார்.

Also Read: உலக தடகள போட்டிகள்: இறுதிக்குத் தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா

எல்தோஸ் பால் 16.12மீ உயரம் தாண்டி தற்போது 10ம் இடத்தில் உள்ளார். மகளிர் ஜாவ்லின் த்ரோவில் இந்திய வீராங்கனை அன்னு ராணி 59.60 மீ தூரம் எறிந்து பிரிவு பி-யில் 5ம் இடத்தில் முடிந்தார். ஆனால் இறுதிக்குத் தகுதி பெற்றார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com