எம்.எஸ்.தோனிக்கு ஐபிஎல் 2022தான் கடைசி சீசனா? – ‘சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சீசனிலும் நான்தான் கேப்டன்’

Share

  • அஷ்ஃபாக்
  • பிபிசி தமிழ்

எம்.எஸ்.தோனி

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு,

எம்.எஸ்.தோனி

சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக 2023 ஐபிஎல் சீசனிலும் தொடர்வேன் என பேசியிருக்கிறார் எம்.எஸ்.தோனி

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான தோல்விகளோடு வெளியேறினாலும் அடுத்த ஆண்டிலும் கேப்டனாக தொடர்வேன் என தோனி அறிவித்திருப்பது பேசு பொருளாகி வருகிறது

ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தின்போது பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி, “சென்னையில் விளையாடாமலேயே ரசிகர்களுக்கு நன்றி சொல்வது நியாயமானது அல்ல. அடுத்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் அனைத்து இடங்களுக்கும் சென்று விளையாடலாம் என நம்புகிறேன். அப்படி நடந்தால் வெவ்வேறு இடங்களில் விளையாடி ரசிகர்களுக்கும் நன்றி சொன்னதாக ஆகிவிடும். இது எனது கடைசி ஆண்டாக இருக்குமா, இல்லையா என்பது ஒரு பெரிய கேள்வி. ஆனால் அடுத்த ஆண்டு ஒரு சிறந்த கம்-பேக்கை வழங்க நான் கடுமையாக உழைப்பேன்,” என பேசியிருக்கிறார் எம்.எஸ்.தோனி.

இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறுவாரா எனும் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அடுத்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெறுவாரா எனும் கேள்வியும் அவரது பேச்சின் மூலம் எழுந்திருக்கிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com