எப்ஸ்டீன் ஆவணங்கள், டிரம்ப் குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது என்ன?

Share

ராகுல் காந்தி, ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள், அனில் அம்பானி, அதானி, இந்தியா

பட மூலாதாரம், Sansad TV

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 11) பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள், அனில் அம்பானி, அதானி, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல விவகாரங்களை எழுப்பினார்.

அனில் அம்பானி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மீது ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

ராகுல் காந்தி ‘ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை’ சுமத்துவதாகக் குற்றம் சாட்டிய மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “அவரது உரையில் உள்ள தவறான விஷயங்கள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும்” என்றார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் பதிலளித்துள்ளார்.

ராகுல் காந்தி பேசியது என்ன?

இன்று, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, மத்திய அரசுக்கு எதிராக ராகுல் காந்தி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக எப்ஸ்டீன் ஆவணங்கள் குறித்து அவர் பேசினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com