எப்போதும் செய்யும் சட்னிக்கு பதிலாக கொய்யா சட்னி செய்து பாருங்க.. ருசி அருமையா இருக்கும்..!

Share

சீசனுக்கு ஏற்ப பழங்கள் கடைகளில் கொட்டிக் கிடைக்கும். வெயில் காலத்தில் எப்படி மாங்காய், மாம்பழமோ அதே போல மழை தொடங்கும் ஜூன் – ஆகஸ்ட் மாதத்தில் கொய்யா சீசன் தொடங்கிவிடும். கொய்யாவை வெட்டி அதை உப்பு காரத்தில் தோய்க்கும் போதே எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அப்புறம் கொய்யா துண்டுகள் உள்ளே போவதே தெரியாது.

இப்படி தான் பெரும்பாலும் நாம் சாப்பிட்டிருப்போம். கனிந்து இருந்தால் அதை உப்பு காரம் இல்லாமல் அதை அப்படியே கூட சாப்பிட்டிருப்போம். அதில் வெள்ளை கொய்யா, சிவப்பு கொய்யா என்று இரு வகைகளும் உள்ளன. இவற்றை உப்பு காரம் தொட்டு சாப்பிடுவது மட்டும் இல்லாமல் வேறு என்ன விதத்தில் சாப்பிடலாம் என்று யோசித்ததுண்டா?

இட்லி , தோசைக்கு எப்போதும் போல தேங்காய் சட்னி, காரச் சட்னி, புதினா சட்னி என்று அரைத்து போர் அடிக்காமல் இந்த சீசனில் கிடைக்கும் கொய்யாக்காவை வைத்து சுவையான கொய்யா சட்னி செய்து அசத்துங்கள். கொய்யா சட்னி செய்வது மிகவும் எளிதானதே. ரெசிபி இதோ..

தேவையான பொருட்கள் : 2 பேருக்கு 

250 கிராம் கொய்யா- பொடியாக நறுக்கியது

1/2 தேக்கரண்டி உப்பு

1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – நறுக்கியது

1 டீஸ்பூன் இஞ்சி- நறுக்கியது

2 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள்- நறுக்கியது

இவை எல்லாமே நமது வீட்டில் சாதாரணமாக இருப்பவை தான். இதை வைத்து 10 நிமிடங்களில் ஈஸியாக கிட்னி செய்து விடலாம்.

செய்முறை:

முதலில் மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பின்னர் கொய்யா , மல்லி இலைகள், சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளுங்கள். இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து மீண்டும் அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதை பாத்திரத்தில் மாற்றி , கடுகு , உளுத்தம்பருப்பு , கருவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டி, தோசை இட்லியுடன் வைத்து சாப்பிட்டு பாருங்க. மற்ற சட்னியை எல்லாம் மறந்து விடுவீர்கள். அந்த அளவிற்கு சுவையானதாக இருக்கும்.

இதையும் பாருங்க :பிஸ்கட் இருக்கா… அப்போ அரைமணி நேரத்தில் இந்த டிஷ் டிரை பண்ணி பாருங்க..!

குழந்தைகளுக்கு துவர்ப்பு சுவை பற்றி சொல்லவும், சுவைத்து பார்க்க கொடுக்கவும் என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது இதை நினைவில் கொள்ளுங்கள். இந்த சட்னி கொய்யாவின் இயற்கையான துவர்ப்பு சுவையுடன், உவர்ப்பு, காரத்துடன் சுவையாக இருக்கும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com