வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
ஊர்ப் பெருமை என்பது சர்க்கரைக் கட்டி சாப்பிடுவது போன்றதுதான் எல்லோருக்கும். எனினும் சில ஊர்களின் பழமை வாய்ந்த இடங்கள் நம்மை மேலும் பெருமிதம் கொள்ளச் செய்து இனிய நினைவுகளைக் கல்வெட்டுக்களாகப் பதித்துவிடும்.
எனது ஊரான புதுக்கோட்டை வரலாற்றுப் பெருமை மிக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் மிகப்பழங்கால வரலாற்றுக்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. புதுக்கோட்டையை சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், ஹொய்சாளர்கள் , விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோர் ஆண்டு வந்துள்ளனர்.
எங்கெங்கும் புராதனச் சின்னங்களைச் சுமந்து தனது மூத்த வரலாற்றைப் பறை சாற்றுவதுடன் பெயருக்கேற்றபடி புதுமைகளுக்கும் இடம் தந்து துருவ முடிச்சுகளை அழகாக இணைத்துச் சுமக்கிறது எங்கள் ஊர்.
அழகான சிவப்பு நிற அரண்மனைகள், அற்புதமான தொன்மைச் சான்றுகளை முன்னிறுத்தும் மியூசியம், குடவரைக் கோயில்களான ஸ்ரீதிருக்கோகர்னேஸ்வரர் கோயில், சித்தனவாசல் ,திருவேங்கைவாசல், கோட்டைக்குப் பெயர் பெற்ற திருமயம் , புகழ்பெற்ற நார்த்தாமலை (தஞ்சைப் பெரிய கோவிலுக்கு சிவப்பு கிரானைட் கற்கள் தந்த மலை),