எது புதிய முட்டை, எது பழைய முட்டை? இப்படி கண்டுபிடிக்கலாம்! |#WorldEggDay #VisualStory

Share

உலக முட்டை தினம், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 14 -ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முட்டையின் முக்கியத்துவம், அதன் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மலிவான விலையில் கிடைக்கும், ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு முக்கிய உணவு, முட்டை. முட்டை புதியதா, பழையதா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம், அதை எத்தனை நாள்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்? இதோ தகவல்கள்…

முட்டையை வாங்கும் முன் சுத்தமாக, வெள்ளையாக உள்ளதா எனப் பார்த்து வாங்க வேண்டும். பழைய முட்டையாக இருந்தால், கொஞ்சம் பழுப்பு நிறத்தில் தெரியும்.

முட்டையை ஃப்ரிட்ஜில், அதுவும் கதவில் முட்டை வைப்பதற்குரிய இடத்தில் வைப்பது நல்லது. அந்த இடத்தில்தான் முட்டைக்குத் தேவையான தட்பவெப்ப நிலை கிடைப்பதோடு, கெடாமலும் இருக்கும். முட்டையை 3 வாரத்துக்கு மேல் வைத்திருக்கக் கூடாது.

குளிர்ச்சித்தன்மை இல்லாத சூழல் என்றால், முட்டையை வாங்கிய 3 நாள்களுக்குள் சமைத்து விட வேண்டும். மூன்று நாள்களுக்கு மேல் ஃபிரிட்ஜுக்கு வெளியில் வைத்திருக்கும் முட்டையைச் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

ஒரு பவுலில் முட்டையின் அளவை விட இரண்டு மடங்கு நீரை நிரப்பி, அதில் முட்டைகளைப் போட்டால், ஃப்ரெஷ்ஷான முட்டை நீரில் ப்ளாட்டாக சாய்ந்து இருக்கும்.

பழைய முட்டையாக இருந்தால் முட்டையின் கூர்மையான நுனிப் பகுதி பாத்திரத்தில் பட்டு நிற்கும் நிலையில் காணப்படும். மேலும் எந்த முட்டையாவது மிதந்தால் அதைச் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

ஒரு முட்டையைக் கையில் எடுத்து, காது அருகில் வைத்து, மென்மையாக அதனை ‘ஷேக்’ செய்து, 10 நொடிகள் காது அருகில் வைத்து கவனியுங்கள்.

சத்தம் எதுவுமே வரவில்லை எனில் அது நல்ல முட்டை. ஏதாவது சின்னச் சத்தம் வந்தால் அதை சமைக்காமல் விட்டுவிடுவது நல்லது.

முட்டையை தோசை தவாவில் உடைத்து ஊற்றும் போது, மஞ்சள் கரு சிறிது மேலெழும்பி இருந்தால் அது ஃப்ரெஷ். அதே மஞ்சள் கரு கொஞ்சம் தளர்வாகக் கீழே அமுங்கி இருந்தால், தளர்ந்து ஓடினால் அது கொஞ்சம் பழைய முட்டை.

முட்டையில் சால்மோநெல்லா (Salmonella) என்ற கிருமியும், மற்ற கிருமிகளும் இருக்கும் என்பதால் பச்சையாகச் சாப்பிடவே கூடாது. சமைக்கப்பட்ட முட்டையைச் சாப்பிடுவதே நல்லது.

சமைக்கப்பட்ட முட்டையை 2 மணி நேரத்துக்குள் சாப்பிட வேண்டும். முட்டையை எந்த முறையில் வேண்டுமானாலும் சமைத்துச் சாப்பிடலாம். ஆனால், மிகச் சிறந்த தேர்வாக இருப்பது வேக வைக்கப்பட்ட முட்டையே.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com