எது சப்பாத்தி கொத்தா? கன்னியாகுமரி வெஜிடேரியன் மக்களை கட்டி போட்ட அசத்தலான டிஷ்!

Share

நாம எவ்வளவோ ஹோட்டல்ல கொத்து புரோட்டா, முட்டை கொத்து, சிக்கன் கொத்து, மட்டன் கொத்து, பீப் கொத்து, இப்படி விதவிதமா சாப்பிட்டு இருப்போம். இது எல்லாமே அசைவ பிரியர்களுக்கு ரொம்ப பிடித்தமான உணவு . ஆனா இதே சைவம் அப்படின்னு எடுத்துக்கிட்டா இந்த மாதிரி வித்தியாசமான கொத்து உணவுகள் எதுவுமே இல்லைன்னு சைவம் பிரியர்கள் Feel பண்ணி இருப்போம் .

சைவ பிரியர்களுக்கும் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன் என இருப்பவர்களும் விரும்பி சாப்பிடுற மாதிரி ஒரு உணவு தான் இப்ப நம்ம பாத்துட்டு இருக்குற சப்பாத்தி கொத்து. எல்லாரும் வித்தியாசமா பல உணவுகள் பண்ணும்போது சைவ ஹோட்டல் வச்சிருக்க நாம என்ன பண்றது அப்படின்னு யோசிச்சு கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் இருக்கக்கூடிய வள்ளி இட்லி கடை காரங்க ட்ரை பண்ணுன ஒரு வித்தியாசமான வெரைட்டி தான் இந்த சப்பாத்தி கொத்து.

அது என்ன சப்பாத்தி கொத்து , இது ஸ்பெஷல் என்ன , எப்படி செய்றாங்க இந்த வீடீயோ பார்த்து தெரிஞ்சிக்கலாம்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

சப்பாத்திய பொடி பொடியா நறுக்கி எண்ணெயில் நறுக்கின வெங்காயம் , பச்சை மிளகாய் , தக்காளி , கருவேப்பிலை எல்லாம் போட்டு வறுத்து அப்படியே சப்பாத்தியும் போட்டு கொஞ்சம் கிளறி அதுக்கு மேல கொஞ்சம் குருமாவை ஊத்தி கொத்து புரோட்டா குத்துற மாதிரியே செமையா கொத்தி நல்ல வேகவைத்து அதுக்கு மேல கொஞ்சம் வெங்காயத்தை தூவி அத அப்படியே ஒரு இலையில வைச்சி பரிமாறுவாங்க சாப்பிடவே சும்மா வேற லெவல்ல இருக்கும்.

சைவ பிரியர்களுக்கு மட்டுமில்லாம இந்த உணவு அசைவ பிரியர்களையும் கவர்ந்து இழுக்கும் அந்த அளவில் இருக்கும் இதோட சுவை.

இதுகுறித்து இந்த கடையின் பங்குதாரர்களில் ஒருவரான வைரமுத்து நம்மிடம் கூறியதாவது, நாங்க மூணு தலைமுறையாக ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் அப்பா , தாத்தா காலத்தில் இருந்தே சைவம் உணவு மட்டுமே சமையல் பண்ணிட்டு இருக்கோம். சைவத்திலே ஏதாவது வித்தியாசமான வெரைட்டி பண்ணி எங்களோட வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கணும் அப்படிங்கற ஆசையில ட்டிரை பண்ணுனது தான் இந்த சப்பாத்தி கொத்து . இந்த சப்பாத்தி கொத்துக்குன்னு தனி ஃபேன்ஸ் எங்க கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com