எதிர்கால கொரோனா எப்படி இருக்கும்? கோவிட் பற்றிய இந்திய மருத்துவச்சங்கத்தின் விரிவான பாட புத்தகம்! | Indian medical association physicians published textbook of future covid

Share

கோவிட் தொற்றில் தீவிரமாகப் பணியாற்றியவரும், இந்திய மருத்துவ சங்க கேரள ஆராய்ச்சிப் பிரிவு துணைத் தலைவருமான மருத்துவர் ராஜீவ் ஜெயதேவன் இந்தப் பாடப்புத்தக அத்தியாயத்தின் ஆசிரியர்.

எதிர்கால கோவிட் பற்றி புத்தகத்தில் கூறப்பட்ட தகவல்கள்:

*இதன்பின் வைரஸ் கடுமையான நோயை ஏற்படுத்தாது. நோய் தொற்றுகள் அறிகுறி இல்லாமல் இருக்கும் அல்லது லேசாக உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்கும்.

*மாறுபட்ட உயிரியல் பண்புகளுடன் புதிய வேரியன்ட்கள் வரலாம். இவற்றை நிராகரிக்க முடியாது. ஏனெனில் பல வைரஸ்களை போல அல்லாமல், SARS COV 2 பல உறுப்பு அமைப்புகளைச் சேதப்படுத்தும் திறன் கொண்டது.

* இதயம், ரத்த நாளங்கள், மூளை, நோயெதிர்ப்பு சக்தி, நுரையீரல் உள்ளிட்ட அமைப்புகளைச் சேதப்படுத்தும் திறன் கொண்டது.  அதுவும் இது நோய்க்கிருமியாக மாறும் பட்சத்தில் கடுமையான விளைவுகளைத் தூண்டலாம்.  

*நிபுணர்களின் கணிப்புகளைத் தாண்டி, ஒரு தொற்றுநோய் செயல்படுகிறதெனில், அதற்குப் பல காரணங்கள் இருக்கும். இது மற்றொரு சுழற்சி வைரஸ் தொற்று.

*இப்போது, கோவிட் பற்றி யாரும் படிக்கவோ பேசவோ விரும்புவதில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், கோவிட் ஒருபோதும் கடந்தகால அறிவியலாக இருக்காது. கோவிட் பல புதிய விஷயங்களை மருத்துவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. 

*இன்றும் லாங் கோவிட் பாதிப்பு என்பது நோயாளிகளுக்கு பெரிய கவலையாக உள்ளது. எனவே, வருங்கால மருத்துவர்கள் கோவிட் தொற்றைப் புரிந்துகொள்வது முக்கியம். எனவே இந்தப் புத்தகம் மருத்துவ மாணவர்களுக்குப் பரவலாக விநியோகிக்கப்படும். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com