எடப்பாடி வெளியேற வலியுறுத்தி ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்

Share

திண்டுக்கல்: நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் தொடர் தோல்விக்கு காரணமான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிலிருந்து உடனடியாக வெளியேற வலியுறுத்தி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திண்டுக்கல்லில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், ‘எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக சட்ட விதிமுறைகளை காலில் போட்டு மிதித்து, ஜெயலலிதா வகித்த நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை அபகரிக்க துடிக்கும் எடப்பாடி பழனிசாமியே… கட்சியை விட்டு உடனடியாக வெளியேறு’ என கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்காக மேடை அமைக்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி இல்லை எனக் கூறியதால் அகற்றப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com