சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் குமார் செல்போனில் வாழ்த்து தெரிவித்தார். திடீரென்று அவர் வாழ்த்து தெரிவித்ததன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்ப் படவுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர், அஜித் குமார். அவரது தந்தை பி.சுப்பிரமணியம் (85), கடந்த 24ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஈசிஆர் ரோட்டிலுள்ள வீட்டில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பலர் அஜித் குமாரை அவரது வீட்டில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்நிலையில், அஜித் குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ ஆகியோர் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செல்போனில் தொடர்புகொண்டு அஜித் குமாருக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அஜித் குமார் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இச்சம்பவம் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு அஜித் திடீர் வாழ்த்து: நடந்தது என்ன?
Share