என்னையுமே எங்க அப்பா படிச்சு சர்க்கார் வேலைக்குப் போடான்னுதான் சொல்லிட்டே இருந்தார். அப்படி போகாததும் ஒருவழிக்கு நல்லதுதான். போயிருந்தா இன்னைக்கு மதுரை முத்து கிடைச்சிருக்க மாட்டான்னு நினைக்கேன்.
அதேநேரம் ஊர்ல இப்படி ஆர்வப்படுகிற பசங்களுக்கு ஏத்த வசதிகளை அவங்க குடும்பங்களால செய்து தர முடியாத சூழலும் இருக்கு. எல்லாராலயும் மதுரைக்குப் போய் படிக்க வைக்க முடியுமா? அதனாலதான் போட்டித் தேர்வுக்குத் தேவைப்படுகிற புத்தகங்கள், செய்தித்தாள்கள்னு எல்லாத்தையும் எங்க கிராமத்துலயே கிடைகிற மாதிரி செய்யலாம்னு நினைச்சேன். எல்லா நாளும் செயல்படுகிற மாதிரி எங்க குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தர் லைப்ரரியில பணியாள் போலவே இருப்பார். எந்த நேரமும் விருப்பபப்பட்ட யாரும் வந்து பயன்படுத்திக்கலாம்.
முதல் கட்டமா இப்படி சின்ன அளவுல தொடங்கியிருக்கேன். பயன்பாட்டைப் பொறுத்து இதை விரிவுபடுத்தற திட்டமும் இருக்கு” என்கிறார் முத்து.
முத்துவின் நூலகத் திறப்பு விழாவில் ராமருடன் கலக்கப் போவது யாரு பாலாவும் கலந்து கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…