ஊமைத்துரை: பாஞ்சாலங்குறிச்சியில் ஆறே நாட்களில் கோட்டை கட்டிய இவர், சைகை மொழியில் படை நடத்தியது எப்படி?

Share

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை

பட மூலாதாரம், Tamilnadutourism

படக்குறிப்பு, ஊமைத்துரையை தூக்கிலிட்ட பிறகு, கிளர்ச்சி குறித்த எந்த சுவடும் இருக்கக்கூடாது என பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தகர்க்கப்பட்டது (தற்போது அங்கு இருக்கும் மாதிரி கோட்டை இது)

“இறுதி தருணங்களில் கட்டபொம்மனிடம் ஒருவித துணிச்சலும் கர்வமும் தென்பட்டது. ஆனால் தூக்குமேடையை நோக்கி நடந்துச் செல்லும்போது, ஒருவரைப் பற்றி மட்டும் மிகவும் கவலைப்பட்டார் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அது அவரது தம்பி ஊமைத்துரை”

அக்டோபர் 16, 1799 அன்று கயத்தாறில், வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது குறித்து ஆங்கிலேய அரசின் (மதராஸ் மாகாணம்) செயலருக்கு மேஜர் பானர்மேன் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது 1881-இல் மதராஸ் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட, ராபர்ட் கால்டுவெல் எழுதிய ‘திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு’ என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய ராணுவத்தில் அதிகாரியாக இருந்த ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ், 1830இல் வெளியிட்ட ‘Military Reminiscences’ என்ற புத்தகத்தில், “நான் அறிந்ததிலேயே மிகவும் அசாதாரணமான ஒரு மனிதர், ஊமைத்துரை தான்” என்று கூறியுள்ளார்.

தமிழறிஞர் மா.பொ.சிவஞானம் எழுதிய ‘கயத்தாற்றில் கட்டபொம்மன்’ என்ற நூலில், “வீரபாண்டியனை விட ஊமைத்துரையே ஆங்கிலேயரை எதிர்த்து அதிகம் போராடினார்” என்று கூறியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com