தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. 24 வயதான தனலட்சுமி, இந்த ஆண்டு அலமாட்டியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 200 மீட்டர் தூரத்தை 23.21 நொடிகளில் கடந்து தேசிய சாதனை புரிந்தார். அந்த தொடரில் ஹீமா தாஸ், டுட்டி சந்த் ஆகிய 2 நட்சத்திர வீராங்கனைகளையும் தனலட்சுமி வீழ்த்தி இந்தியாவின் வேகமான வீராங்கனை என்ற பெயரை பெற்றார்.
பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க தயாராகி வந்த நிலையில் மே மாதம், உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் தடை செய்துள்ள அனபோலிக் என்ற ஊக்கமருந்து உட்கொண்டதாக சோதனை முடிவுகள் வெளியாகின. இதனை தொடர்ந்து அவர் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது அனைத்துவித போட்டிகளிலும் கலந்து கொள்ள மூன்றாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Also Read: செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா தோல்வி.. எஞ்சிய வீரர்கள் அசத்தலால் இந்திய பி அணி தொடர்ந்து முதலிடம்
வழக்கமாக ஊக்கமருந்து சோதனைகளில் தோல்வி அடைபவர்களுக்கு தடகள உண்மைத்தன்மை அமைப்பு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கும். தான் ஊக்கமருந்தை உட்கொண்டதை தனலட்சுமி ஓப்புக்கொண்டதாலும் தடையை ஏற்றுக்கொண்டதாலும் அவருக்கான தடை 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் தடையுடன், மே 1- ஆம் தேதிக்கு பின்னர், தனலட்சுமி பெற்ற பதக்கங்களும் பரிசுகள் திரும்ப பெறப்படும்.
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.