`உள்ளுறுப்புகள் தூய்மையாகும்; குடல் புற்றுநோயைத் தடுக்கும்!’ -சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மகத்துவங்கள் | Doctors explain health benefits of sweet potato and how it prevents Colon Cancer

Share

உருளைக்கிழங்கை விட சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கலோரிகள் அதிகம். இதைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். இதிலிருக்கும் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் எலும்புகள் வலுப்பெற உதவும். அனைத்திற்கும் மேல், வயது அதிகமாக அதிகமாக பார்வை மங்கும், சருமத்தில் சுருக்கம் ஏற்படும். இது போன்ற வயது முதிர்வினால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைத்து என்றும் இளமையாகக் காட்டும் சிறந்த உணவு சர்க்கரை வள்ளிக்கிழங்கு.

தினம் தினம், நாம் சாப்பிடும் உணவு மலக்குடலில் தங்கும் போது, மலச்சிக்கல் ஏற்பட்டு நாளடைவில் மலம் இறுகி குடல் புற்றுநோயாக மாறிவிடும். வயிற்றைச் சுத்தம் செய்ய அந்தக் காலத்தில் விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்வோம். ஆனால் தற்போது அதுபோன்ற பழக்கங்கள் இல்லை. குடலை இயற்கையாகச் சுத்தம் செய்ய சர்க்கரை வள்ளிக்கிழங்கை எடுத்துக்கொள்ளலாம்.

Health (Representational Image)

Health (Representational Image)
Photo by Hush Naidoo on Unsplash

வாரத்தில் 5 நாள்கள் வேலை பார்த்தால், இரண்டு நாள்கள் ரெஸ்ட் எடுப்பது போல, அவ்வப்போது நாம் விரதம் மேற்கொள்வதன் மூலமும் குடலைச் சரி செய்து கொள்ள முடியும்.” என்றார்.

குடல் புற்றுநோய் பாதிப்புகளுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு இயற்கையான தீர்வாகுமா என்பது குறித்து புற்றுநோயியல் மருத்துவர் ரத்னா தேவி”யிடம் பேசினோம்..!

“மனிதர்களின் உடலில் பி6 வைட்டமின் குறைபாடு ஏற்படும் போது, மகிழ்ச்சி ஹார்மோன் என்று சொல்லப்படும் டோபமைன் குறைவதால் மன அழுத்தம், மனக்கவலை போன்ற மன ரீதியான தொல்லைகள் ஏற்படும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பி6 வைட்டமின், அதிகம் இருப்பதால் உடலில் டோபமைன் ஹார்மோன் சுரக்கும் போது, மனதில் மகிழ்ச்சியை அதிகரித்து நம்மை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com