உலக செஸ் சாம்பியன்ஷிப்: 13-வது சுற்று டிராவில் முடிந்தது | World Chess Championship Round 13 ends in a draw

Share

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் 12 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று 13-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. குகேஷ் வெள்ளை காய்களுடனும், டிங் லிரென் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். இந்த ஆட்டம் 68-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. 13 சுற்றுகளின் முடிவில் டிங் லிரென், குகேஷ் ஆகியோர் தலா 6.5 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளனர்.

இன்று கடைசி சுற்று ஆட்டம் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர் 7.5 புள்ளிகள் சாம்பியன் பட்டம் வெல்வார். ஒருவேளை இந்த சுற்றும் டிராவில் முடிவடைந்தால் இருவரும் தலா 7 புள்ளிகளுடன் இருப்பார்கள். அப்போது வெற்றியை தீர்மானிக்க டை பிரேக்கர் கடைபிடிக்கப்படும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com