உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிராவில் முடிந்த 5-வது சுற்று | D Gukesh vs Ding Liren, World Chess Championship 2024 Game 5 Highlights

Share

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்டி சிங்​கப்​பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்​பியனான சீனா​வின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்​டரான குகேஷ் எதிர்த்து விளை​யாடி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்​டி​யில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்​தார். 2-வது சுற்று டிரா​வில் முடிவடைந்​திருந்​தது. 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று பதிலடி கொடுத்​திருந்​தார். தொடர்ந்து 4-வது சுற்று டிரா​வில் முடிவடைந்​திருந்​தது.

இந்நிலை​யில் 5-வது சுற்றில் நேற்று டிங் லிரென், குகேஷ் மோதினார்​கள். டிங் லிரென் கருப்பு காய்​களு​ட​னும், குகேஷ் வெள்ளை காய்​களு​ட​னும் விளை​யாடி​னார்​கள். இந்த ஆட்டம் 40-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. 5 சுற்றுகளின் முடி​வில் இருவரும் தலா 2.5 புள்​ளி​களு​டன் சமநிலை​யில் உள்​ளனர்​.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com