உலகம் முழுவதிலும் ஆறில் ஒருவர் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
மலட்டுத் தன்மை என்பது ஆண் மற்றும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பை பாதிக்கக்கூடிய பிரச்னை. 12 மாதங்கள் அல்லது அதற்கும் மேல் பாலியல் உடலுறவு கொண்டும் கருவுறாத தன்மையை மலட்டுத் தன்மை என்று அழைக்கின்றனர்.
இது மக்களின் வாழ்வில் உளவியல் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இதற்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள், பொருளாதார நிதி நெருக்கடியையும் உண்டாக்குகிறது.