உலகக் கோப்பை கிரிக்கெட் வெற்றி மகளிர் கிரிக்கெட்டுக்கு ஊக்கம் அளிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் உற்சாகம்

Share

சென்னை: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​திருந்​தது. இந்​நிலை​யி​யில் ஹர்​மன்பிரீத் கவுருக்கு சென்னை செம்​மஞ்​சேரி​யில் உள்ள சத்​ய​பாமா பல்​கலைக்​கழகத்​தில் நேற்று பாராட்டு விழா நடத்​தப்​பட்​டது.

இந்நிகழ்ச்​சிக்கு பின்​னர் நிரூபர்​களிடம் ஹர்​மன்​பிரீத் கவுர் கூறியதாவது: உலகக் கோப்பை வெற்​றியை மொத்த நாடும் கொண்​டாடு​வ​தால் மிக​வும் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது. நமது நாட்​டில் ஆடவர், மகளிர் கிரிக்​கெட் சமமாக நடத்​தப்​படு​வ​தாகவே உணர்​கிறேன். ஐசிசி கோப்​பையை வெல்ல வேண்​டும் என்ற லட்​சத்​தி​யத்தை நாங்​கள் அடைந்​து​விட்​டோம். இந்த வெற்றி மகளிர் கிரிக்​கெட்​டுக்கு ஊக்​க​மாக இருக்​கும். ஏராள​மான இளம் வீராங்​க​னை​கள் உந்​துதல் பெறு​வார்​கள்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com