உலகக் கோப்பை அணி காம்பினேஷன் இது தானா?! | WCT20 | India wins against SA in warm up match, what will be india’s WC Combination

Share

இமாலய இலக்கை நோக்கி…

240 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய செளத் ஆப்பிரிக்கா அணி, முதல் ஓவரிலேயே லிண்டே விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் பந்தில் இழந்தது.

அதன்பின் மார்க்ரம் – ரிக்கெல்டன் இணை அணியை மீட்டெடுக்க முயன்றது. 6-வது ஓவரில் மார்க்ரம் ரிட்டையர் அவுட் மூலம் வெளியேறினார்.

அர்ஷ்தீப் சிங்

அர்ஷ்தீப் சிங்
BCCI

அதனைத் தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர்களிடம் தொடர்ந்து விக்கெட்களை இழந்த செளத் ஆப்பிரிக்கா அணி, ஸ்டப்ஸ் மற்றும் ஜான்சன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் போராடியது.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் மட்டுமே எடுத்த செளத் ஆப்பிரிக்கா அணி, 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது.

சில மாற்றங்கள் இருக்கலாம்:

அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்து தொடரில் ஆடிய இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்பதை பயிற்சி ஆட்டம் காட்டியுள்ளது. இஷான் கிஷன்(1) – அபிஷேக்(2) ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கவே அதிக வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் திலக் வர்மா(3) அல்லது கேப்டன் சூர்ய குமார் யாதவ்(4) ஆகியோர் தேவையை பொறுத்து களமிறங்குவார்கள்.

அவர்களை தொடர்ந்து, பாண்ட்யா(5), துபே(6), ரிங்கு சிங்(7), அக்ஷர் படேல்(8) முதலியோர் களமிறங்குவார்கள். பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் பும்ரா(9), அர்ஷ்தீப் சிங்(10) வேக கூட்டணியை பாண்ட்யா உதவியுடன் செய்வார்கள். அக்ஷர் படேலுடன் கூடுதலாக ஒரு ஸ்பின்னர்(11) அணியில் சேர்க்கப்படுவார். அதில் தான் இந்திய அணி கடும் சவாலை சந்திக்க கூடும். வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது.

ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து கூடுதல் ஸ்பின்னர்களுடன் போக வேண்டிய நிலை ஏற்பட்டால், தூபேவுக்கு பதில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் என இருவரையும் களத்துக்கு கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது.

உங்க பிளேயின் லெவனை கமென்ட்டில் பதிவிடுங்கள் மக்களே..!

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com