உருளைக்கிழங்கை வைத்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான டிபன் செய்ய ரெசிபி…

Share

இரவு உணவுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி , உப்மா போன்றவை தான் சாதாரணமாக செய்வோம். அரிசி மாவு தோசை கொஞ்சம் போர் அடித்தால், கோதுமை தோசை, ரவா தோசை முதலியவற்றை செய்வோம். அதைத்தாண்டி என்ன செய்வது என்று யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டு இருப்போம்.

இதே பிரச்சனை தான் காலையிலும் இருக்கும். ஆனால்  காலை , இரவு டிபன், மாலை ஸ்னாக்ஸ் என்று எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும் ஒரு உரிமையாக செய்யக்கூடிய உணவு பற்றி தான் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம். பொதுவாக உருளைக்கிழங்கை வைத்து போண்டா, சமோசா, கட்லட், உருளை பொரியல், சிப்ஸ் தானே செய்திருப்போம்.

ஆனால் உருளைக்கிழங்கை வைத்து பணியாரம் செய்ய முடியும் என்பது தெரியுமா? அதுவும் குழந்தைகளுக்கு பிடித்தமான சுவையிலும்  ஆரோக்கியமானதாகவும் இருக்கும் . இதை சமைக்கவும் ரொம்ப சிரமப்படத் இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களே போதுமானதாக இருக்கும்.

ஃபராலி பணியாரம் தேவையான பொருட்கள் (3 தோசைக்கு)

  • 1/2 கப் வேகவைத்த உருளைக்கிழங்கு
  • 1/2 கப் கொத்தமல்லி இலைகள்
  • 1/2 கப் நொறுக்கப்பட்ட வறுத்த வேர்க்கடலை
  • 2 தேக்கரண்டி நெய்
  • 1 1/2 கப் அமராந்த்/ தண்டு கீரை விதை / அதன் மாவு / எதாவது ஒரு தானிய மாவு
  • 1/2 கப் தயிர்
  • தேவைக்கேற்ப  உப்பு

சரி இப்போது பணியாரத்துக்கு தேவையான மாவை எப்படி தயார் செய்வது என்று பார்த்துவிடலாம். ஒரு  பாத்திரத்தில் ராஜ்கிரா / அமராந்த்/ தண்டு கீரை மாவை எடுத்து, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி இலைகள், தயிர், பச்சை மிளகாய்-இஞ்சி விழுது, அரைத்த வேர்க்கடலை, உப்பு, 2 டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கட்டி இல்லாத மாவாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.

இதை குறைந்தது ஒரு பத்து நிமிடம் மூடி வைத்துவிடவும். அதன் பின்னர் என்ன பணியாரம் ஊற்றுவது தான்.  பணியார கல்லை மிதமாக சூடு செய்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் அச்சுகளில் மாவை ஊற்றவும். பின்னர் அதை ஒரு மூடி போட்டு மூடி வைத்துவிடுங்கள். 5-7 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவைத்து பின்னர் புரட்டி போடவும்.

மற்றொரு 5-7 நிமிடங்கள் அல்லது மறுபுறம் இதேபோல் வேகும்  வரை சமைக்கவும். இதற்கு தேங்காய் சட்னி அரைத்து பரிமாறினால் எத்தனை ஈடு பணியாரம் உள்ளே போகிறது என்றே தெரியாது. ஆனால் இதை பொறுமையாக வேகவைக்க வேண்டும். அதிக தீயில் வேகவைத்தால் வெளிப்புறம் கருகிவிடும். உள்ளே வேகாமல் இருக்கும்.

இதையும் பாருங்க: சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் குடிக்க 5 டீ வகைகள்!

கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இதில் நேரடியாக கீரையை பொடியாக நறுக்கி சேர்ந்தும் பணியாரம் சுடலாம். அல்லது தனியங்களின் மாவை கீரை விதை மாவிற்கு பதிலாக சேர்த்து கலந்து செய்யும்போது குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சேர்த்து கொடுத்ததாக மாறிவிடும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com