குறிப்பாக, குழந்தைகள் உணவை சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் சமயங்களில், அவர்களிடம் ஸ்வீட் ஒன்றை காட்டி, எல்லா உணவையும் சமத்தாக சாப்பிட்டு முடித்தால் இந்த ஸ்வீட் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறும் வழக்கம் கூட உண்டு. ஆனால், இது தவறானது.
பெரும்பாலான ரெஸ்ட்ராண்ட்களில் கூட உணவின் இறுதியில் ஸ்வீட் பரிமாறுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் உணவை சாப்பிட்டுவிட்டு ஒரு ஐஸ்கிரீம் சுவைப்பதை நாம் வாடிக்கையாக வைத்திருக்கிறோம். ஆனால், இது தரும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகம்.
அதே சமயம், உணவுக்கு முன்பாக ஸ்வீட் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது. இது நம் உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தவும், ஊட்டச்சத்தை உறிஞ்சிக் கொள்ளவும் உதவிகரமாக இருக்கும். ஆயுர்வேத நிபுணர், மருத்துவர் நிதிகா கோலி, இதுகுறித்த ஆலோசனைகளை இன்ஸ்டாகிராம் மூலமாக தெரிவித்துள்ளார்.
also read : சைவ உணவுகளை மட்டும் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு இப்படியொரு சிக்கலா?
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவுக்கு, “பின்வரும் ஆலோசனைகள் என்பது பண்டைய கால ஆயுர்வேத பலன்களை உள்வாங்கிக் கொள்ள உதவிகரமாக இருக்கும். இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி ஸ்வீட்கள் மூலமாக உடல் நலன், ஆற்றல் போன்றவற்றை அதிகரிக்க முடியும்’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.
உணவுக்கு முன்பாக ஸ்வீட்கள் சாப்பிடுவது ஏன்?
பொதுவாக இனிப்புகள் செரிமானம் அடைய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆகவே, இனிப்புகளை முதலில் எடுத்துக் கொள்ளும்போது செரிமானத்திற்கு தேவையான என்ஜைம்களின் சுரப்பு அதிகமாக இருக்கும். அதுவே உணவுக்குப் பிறகு இனிப்புகளை எடுத்துக் கொள்ளும்போது செரிமானத்தை அது மட்டுப்படுத்துகிறது.
also read : மதிய உணவிற்கு என்ன சமைக்க போறீங்க? நாவூற வைக்கும் 9 ரெசிபிகள் இதோ..
உணவுக்கு முன்னால் இனிப்புகளை எடுத்துக் கொள்ளும்போது நம் நாவில் உள்ள சுவை மண்டலத்தை அது தூண்டிவிடும். உணவுக்குப் பிறகு இனிப்புகளை எடுத்துக் கொண்டால் உணவு செரிமானம் ஆகாமல், ஆசிட் சுரப்பு அதிகமாவதற்கு வழிவகுக்கும். இது மட்டுமல்லாமல் உணவுக்குப் பின்னர் இனிப்புகளை எடுத்துக் கொண்டால் வாயு உருவாகும் என்று ஆயுர்வேத நிபுணர் நிதிகா கோலி தெரிவித்துள்ளார்.
காலை உணவில் இனிப்பு முக்கியம்:
மற்ற வேளை உணவுகளைக் காட்டிலும் காலை வேளை உணவுக்கு முன்பாக ஸ்வீட் எடுத்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். குறிப்பாக, நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். அதனால், தமிழர் பண்பாட்டில் பெரும்பாலும் காலை டிபன் உணவுக்கு முன்பாக கேசரி, அல்வா, போன்றவற்றை பரிமாறுகின்றனர். நீரிழிவு நோய் அபாயத்தை தடுக்க வேண்டும் என விரும்புபவர்கள் லோ-கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்ட இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.