உணவில் உப்பு கூடினால் ஆயுள் குறையும் – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை..!| Does your food contain salt? Reducing life quickly – researchers warn..!

Share

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் உள்ள ஆறு சுவைகளில் உப்பை நம்மை அறியாமலேயே அதிகம் பயன்படுத்தி வருகிறோம். இதனால் நமது உடலுக்குத் தேவையான உப்புச் சத்தின் அளவைவிட அதிக அளவு உப்பு நமது உடலில் தங்குகிறது. அதிக உப்பு, சத்தமில்லாமல் உயிரைக் கொல்லும். எனவே சாப்பிடும்போது நமது மேசையில், இலையில் கூடுதலாக வைக்கப்படும் உப்பை அவசியம் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை உடல் நலத்திற்குக் கேடு என்று தவிர்க்கும் பலரும் உப்பினால் ஏற்படும் ஆபத்தை உணர்வதில்லை. உப்பை எவ்வளவு அதிகம் எடுத்துக் கொள்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் மரணம் நம்மை நெருங்கிவிடும் என்கிறது சமீபத்திய ஆய்வு. உணவில் கூடுதலாகத் தூவும் உப்பு, அகால மரணத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

உணவில் உப்பு சேர்ப்பது உடலில் எத்தகைய விளைவுகளை உண்டுபண்ணும் என்பதை அறிய 500,000 -க்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்திய ஆய்வு பற்றிய ஒரு கட்டுரையை ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல் வெளியிட்டது. அந்த ஆய்வில்,

உப்பை எந்த அளவு அதிகம் உணவில் சேர்க்கிறோமோ அந்த அளவு மரணம் நம்மை நெருங்குகிறது. அதிக உப்பு மனிதனின் ஆயுளைக் குறைக்கும், உணவில் கூடுதல் உப்பைச் சேர்ப்பவர்கள் உடல்நிலை பாதிப்பால் முன்கூட்டியே இறக்கின்றனர். எனவே நீண்டகாலம் வாழ வேண்டும் என விரும்புபவர்கள் உணவில் உப்பை குறைப்பது மிகவும் நல்லது. உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. அதனால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு ஏற்படலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com