உடல்நலம், மருந்துகள்: போதை பொருளாக மாற்றப்படும் மயக்க மருந்துகள் – கட்டுப்படுத்துவதில் என்ன சிக்கல்?

Share

போதை மாத்திரை விற்பனை

பட மூலாதாரம், Getty Images

கோவை மாவட்ட காவல்துறையினர் கஞ்சா மற்றும் போதை ஏற்படுத்தியக்கூடிய மாத்திரைகள், ஊசிகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞர்கள் மூவரை கைது செய்துள்ளனர். 

கடந்த 18ஆம் தேதியன்று பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் போதைப் பொருள் புழக்கம் தொடர்பாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு சோதனையை மேற்கொண்டனர். 

அப்போது மத்தம்பாளையம் பகுதியில் போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கோவர்தனன், பிட்டு பிரவீன் (எ) பிரவீன்குமார், நவீன்குமார் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சா, 208 போதை ஏற்படுத்தக்கூடிய tapentadol மாத்திரைகள், 4 சிரஞ்சுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் இவர்கள் மாத்திரைகளை டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் Winergy என்கிற மருந்து நிறுவனத்திடமிருந்து இணைய வழியாக வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com