இலக்கியங்களிலும் இதற்கு இடமுண்டு
`உழிஞை’ என்ற பெயரில் முடக்கறுத்தானின் வளரியல்பு பற்றி `நுண்கொடி உழிஞை’ என பதிற்றுப்பத்தும், `நெடுங்கொடி உழிஞை’ என புறநானூறும் விவரிக்கின்றன.
போர்களின்போது, அரணை முற்றுகையிடும் அறிகுறியாக இதன் மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வார்களாம். உழிஞையின் பெயரில் ஒருதிணையே (உழிஞைத்திணை) அமைந்திருப்பது முடக்கறுத்தானின் பெருமைக்குச் சான்று.
தாவரவியல்பெயர்:
Cardiospermum halicacabum
குடும்பம்:
sapindaceae
கண்டறிதல்:
ஏறுகொடி வகையைச் சார்ந்தது. மழைக்காலத்தில் அதிக அளவில் தென்படும். மாற்றடுக்கில் அமைந்த இலைகள். ஒற்றைச் சிற்றிலையாக முடியும். மணம் கொண்ட இலைகள். வெண்மை நிற மலர்கள். ரெசிம் வகை மஞ்சரி. மெல்லிய இறகமைப்புக்குள் விதைகள் காணப்படும். மெல்லிய தண்டுடையது. ஈரப்பசை நிறைந்த மண்ணில் முடக்கறுத்தான் விதைகளை விதைக்க, விரைவாகக் கொடியேறும். இன்றே முயன்று பாருங்கள்.
தாவர வேதிப் பொருள்கள்:
Calycosin, Quercetin, Apigenin. Protocatechuic acid
முடக்கறுத்தான்… வேதனையைக் குறைக்கும் சரவெடி..!
– மரு. வி.விக்ரம்குமார், MD(S)