உடலில் இருக்கும் மொத்த கழிவுகளையும் வெளியேற்ற உதவும் லெமன்கிராஸ் டீ.. எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா.?

Share

இன்றளவில் பல்வேறு விதமான பொருட்களைக் கொண்டு செய்யப்படும் வெவ்வேறு விதமான சுவைகளை உடைய தேநீர்கள் கிடைக்கின்றன. அதிலும் ஹெர்பல் டீ வகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வரிசையில் லெமன் கிராஸ் டீ ஒரு அற்புதமான மூலிகை பானம் ஆகும். லெமன் கிராஸ் தண்டு மற்றும் இலைகளைக் கொண்டு காய்ச்சப்படும் இந்த டீயை தற்போது பலர் விரும்பி பருகி வருகின்றனர். லெமன் கிராஸ் டீ குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

செரிமானத்திற்கு லெமன் கிராஸ்:

லெமன் கிராஸ் டீ பல விதமான பாதிப்புகளின் தாக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இது அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றிற்கு கை வைத்தியமாக பண்டை காலங்களில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அல்சர்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. லெமன் கிராஸ் டீயில் காணப்படும் அழற்சி-எதிர்ப்பு பண்பு மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கழிவுகளை அகற்றும் டீடாக்ஸ் பானமாக லெமன் கிராஸ் டீ:

லெமன் கிராஸ் டீ சிறுநீர் வெளியேற்றத்தை ஸ்டிமுலேட் செய்கிறது. இதன் மூலமாக சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. இப்பொழுது லெமன் கிராஸ் டீ குடிப்பதால் கிடைக்கும் பிற பலன்கள் குறித்தும் பார்க்கலாம்:-

  • உடல் எடையை குறைக்க: லெமன் கிராஸ் டீ பருகுவது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் இது உடல் எடை இழக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு அற்புதமான பானமாக அமைகிறது.
  • ரத்த அழுத்தத்தை சீராக்க: லெமன் கிராஸ் டீயில் இருக்கும் பொட்டாசியம் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க: பல்வேறு விதமான தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து நமது உடலை காக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை (Fungus) எதிர்ப்பு பண்புகள் லெமன் கிராஸில் காணப்படுகிறது.
  • சரும ஆரோக்கியத்தை பராமரிக்க: லெமன் கிராசில் காணப்படும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஊட்டச்சத்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்து, சருமத்தை மினுமினுக்க செய்கிறது.
  • மாதவிடாய் வலியை போக்க: ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் டைமில் தாங்க முடியாத வலியை அனுபவிக்கும் பெண்கள் தொடர்ந்து லெமன் கிராஸ் டீ எடுத்து வரும்பொழுது வயிற்று வலி மற்றும் வயிற்று உப்புசத்தில் இருந்து விடுபடலாம்.

Also Read | லெமன் கிராஸ் தினமும் எடுத்துக்கொள்வது நல்லதா..? கெட்டதா..? இதோ முழு விபரம்…

வீட்டிலேயே லெமன் கிராஸ் டீ செய்வது எப்படி?

இந்த லெமன் கிராஸ் டீ செய்வதற்கு நீங்கள் உலர்ந்த அல்லது பிரஷ்ஷான லெமன் கிராஸ் இலைகளை பயன்படுத்தலாம். அதன் தண்டுகளை சுத்தம் செய்த பிறகு அவற்றையும் சேர்த்து கூட உபயோகிக்கலாம். இப்பொழுது லெமன் கிராஸ் டீ செய்ய ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் உலர்ந்த லெமன் கிராஸ் பொடியை போட்டு கொதித்த நீரை ஊற்றவும். இதனை ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் வடிகட்டி பருகலாம். இதில் தேவையான அளவு ஐஸ் கட்டிகள் சேர்த்து குளிர்ந்த பானமாகவும் குடிக்கலாம். ஒரு சில மசாலா பொருட்களை சேர்ப்பது அதன் சுவையையும் பலன்களையும் அதிகரிக்கும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com