ஸ்வீடன் மக்கள் காபியில் உப்பு சேர்க்கப்பட்ட சீஸ் அல்லது பன்றி இறைச்சியைச் சேர்த்துப் பருகி வந்தனர். இரண்டாம் உலகப் போரின்போது உப்புநீரைப் பிரித்தெடுக்கும் கருவிகள் முழுமையாகப் பலனளிக்காததால், அமெரிக்க கடற்படைப் பணியாளர்கள் உப்பு கலந்த காபியைக் குடித்தனர்.
இதுபோல ஹங்கேரி, ஸ்காண்டிநேவிய நாடுகள், சைபீரியா, துருக்கி போன்ற நாடுகளிலும் நீண்ட காலமாகவே காபியில் உப்பைச் சேர்த்து குடிக்கும் வழக்கம் இருந்துள்ளது.
2009-ல் உணவு ஆராய்ச்சியாளரும் சமையல்கலை வல்லுநருமான அல்டன் பிரௌன் என்பவர், காபியில் சிட்டிகை அளவு உப்பு சேர்த்த எபிசோட், அனைவரின் கவனத்தையும் பெற்றது. அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், “உப்பு, காபியின் கசப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், தண்ணீரின் பழைய சுவையையும் மென்மையாக்குகிறது.
ஒவ்வொரு 6 டேபிள்ஸ்பூன் காபியிலும், கால் டீஸ்பூன் கோஷர் உப்பை நான் எடுத்துக்கொண்டேன். சுவைக்கு இது போதாது, ஆனால் அது தந்திரத்தைச் செய்யும். மேலும், சர்க்கரையை விட உப்பு உண்மையில் கசப்பை நடுநிலையாக்குவதில் சிறந்தது என்று ஆராய்ச்சி நிரூபித்துள்ளது’’ என்று பதிவிட்டுள்ளார்.
காபியில் உப்பைச் சேர்த்துக் குடிக்கும் பழக்கம் தற்போது டிரெண்டாகி வருகிறது. உங்க காபியில் உப்பு சேர்ப்பீர்களா?!