ஈ.கோலை: அமெரிக்காவில் ஆர்கானிக் கேரட்டுகள் மொத்தமாக திரும்ப பெறப்பட்டது ஏன்?

Share

அமெரிக்கா : திடீரென கேரட்களுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில், ஈ.கோலை (E. Coli.) தொற்று ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள உணவுப் பொருள் விற்பனையகங்களில் விற்கப்படும் ஆர்கானிக் மற்றும் பேபி கேரட்டுகளை மொத்தமாக திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈ.கோலை தொற்று பாதிப்பால் இதுவரை, 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 18 மாகாணங்களில் 39 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது.

டிரேடர் ஜோஸ், ஹோல் ஃபுட்ஸ் 365, டார்கெட்ஸ் குட் & கேதர், வால்மார்ட், வெக்மேன்ஸ் உள்ளிட்ட பிரதான சூப்பர்மார்க்கெட்டுகள் மற்றும் பிற பெரிய பல்பொருள் அங்காடிகளுக்கு கிரிம்வே ஃபார்ம்ஸ் விநியோகம் செய்த கேரட்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

”தொற்றால் பாதிப்புக்குள்ளான காய்கறிகள் இனி விற்பனையகங்களில் இருக்காது. ஆனால் தடை செய்யப்படுவதற்கு முன்பே வாங்கியவர்களின் வீடுகளில் இருக்கக் கூடும். அப்படி இருப்பின் மக்கள் அந்த காய்களை தூக்கி எறிய வேண்டும் அல்லது பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால் கடைகளுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்” என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com