ஈவினிங் ஸ்னாக்ஸுக்கு 15 நிமிடத்தில் இதை ட்ரை பண்ணி பாருங்க

Share

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது தான். குழந்தைகளுக்கு சாப்பிட சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் ஆரோக்கியநமதாகவும் இருக்க வேண்டும்.

அதே நேரம்   குறைந்த நேரத்தில் செய்வதாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் அதில் செலவானால், இரவு உணவை எப்போது செய்வது? எப்போது சாப்பிடுவது என்ற கேள்வியும் எழும். அதனால் வெறும் 15 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் இப்போது சொல்ல இருக்கிறோம்.

இந்த டிஷ் செய்ய வெளியில் சென்று நிறைய பொருட்கள் வாங்க வேண்டும் என்ற ஆழம் தேவை இல்லை. இதற்கான பெரும்பாலான பொருட்கள் நம் வீட்டிலேயே இருக்கும். பாசி பருப்பு வைத்து செய்யப்படும் மூங் தால் டோஸ்ட் செய்ய என்னனென்ன வேண்டும் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

மூங் தால் டோஸ்ட் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான ரெசிபி ஆகும், இதை நீங்கள் காலை உணவு அல்லது மாலை சிற்றுண்டிக்கு சில நிமிடங்களில் தயார் செய்யலாம். இது மட்டுமின்றி குழந்தைகளின் டிபனுக்கும் இது ஒரு நல்ல சுவையான விருப்பமாகும்.

தேவையான பொருட்கள்: 

1 கப் மூங் தால் – பாசிப்பருப்பு  (ஊறவைத்தது)

1/2 வெங்காயம்- நறுக்கியது

1/4 கப் கேரட், துருவியது

1/4 கப் குடைமிளகாய் -துருவியது

2 பச்சை மிளகாய்

1 இன்ச் இஞ்சி

1 டீஸ்பூன் நெய்

4 பிரட் துண்டு

1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்

1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்

1/4 தேக்கரண்டி மஞ்சள்உப்பு சுவைக்க

1 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள் நறுக்கியது

செய்முறை:

பாசிப்பருப்பு  பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்சியில் போட்டு, அரைத்து மிருதுவான மாவுப் பதம் வரும் வரை பொறுத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். பின்னர் இந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட், சிவப்பு மிளகாய் தூள் , மஞ்சள்தூள், கொத்தமல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். தோசை மாவு போல இருந்தால் நல்லது.

பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக்கி கொள்ளவும். அது சூடாகும் போது  ஒரு தட்டில் ப்ரெட் ஸ்லைஸை எடுத்து வைத்து அதன் மீது ஒரு பக்கத்தில் நாம் கலந்து வைத்த மாவை ஊற்றவும். ஊற்றியதும் கொஞ்சம் தண்ணீரை பிரட் உள்ளே இழுத்து  ஊற ஆரம்பிக்கும்.

இதையும் பாருங்க:தாமரை தண்டு வைத்து சூப்பர் ஈவினிங் ஸ்னாக்ஸ் செய்யலாம்… இதோ ரெசிபி..!

சூடான கல்லில் சிறிது நெய் தடவி அதன் மீது மாவு பரப்பிய ப்ரெட் ஸ்லைஸை வைக்கவும், ஒரு பக்கம் வேகும் போது மாவை மறுபுறமும் பரப்பிவிடவும். பின்னர் அதை புரட்டி போட்டு  அதன் மீது சிறிது நெய்யை ஊற்றி, இருபுறமும் மொறுமொறுப்பாக  வரும் வரை வேகவைக்கவும் . பின்னர் அதை காரத் சட்னியுடன் பரிமாறலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com