ஈலோன் மஸ்க்: உலகின் முதல் பணக்காரராக உயர்ந்தது எப்படி? டிரம்பை ஆதரித்தது ஏன்?

Share

மஸ்க்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து மஸ்க்கின் அந்தஸ்தும் செல்வமும் இன்னும் உயரும் என்று தெரிகிறது

ஈலோன் மஸ்க் குறித்து தினமும் ஏதேனும் ஒரு தலைப்புச் செய்தி வருவது என்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

எக்ஸ் எனும் சமூக ஊடகத் தளம் (முன்னர் ட்விட்டர்), டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர், உலகின் நம்பர் 1 பணக்காரர். தனது சமூக ஊடகத் தளத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, பல தரப்பட்ட தலைப்புகளில் தனக்கு இருக்கும் கருத்துகளை உலகிற்கு தெரியப்படுத்துபவர்.

அவர் தனது நிறுவனமான நியூராலிங்க் மூலம் மனித மூளையில் பொருத்தக்கூடிய சிப் குறித்த சோதனைகளை மேற்கொண்டார். எக்ஸ் தளத்தை ஒரு ‘சூப்பர் ஆப்’-ஆக (Super App) மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறார். செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று முன்னர் அவர் எச்சரித்த போதிலும், வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு உலகில் தனது இருப்பை உறுதிப்படுத்த முயற்சி செய்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் (2024) டொனால்ட் டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து மஸ்க்கின் அந்தஸ்தும் செல்வமும் இன்னும் உயரும் என்று தெரிகிறது. மஸ்க் இந்தத் தேர்தலில் ஒரு முக்கியமான, ஆனால் அதேசமயம் சர்ச்சைக்குரிய ஒரு வகையில் பங்காற்றினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com