தமிழ்நாடு அரசின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான ஓட்டப்பந்தய போட்டியில் தூத்துக்குடி மாவட்டம், T.சவேரியார்புரத்தை சேர்ந்த சகாய ஜெமிமா என்ற பத்தாம் வகுப்பு மாணவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஜெமிமாவின் வெற்றி குறித்து பள்ளி முதல்வர் மரிய செல்வராணி கூறுகையில், “மாணவியின் முழுமனதான ஈடுபாடு, தொடர் பயிற்சி மற்றும் உழைப்புதான் மாணவியின் வெற்றிக்கான காரணம். பள்ளிக்கென தனியாக விளையாட்டு பயிற்சியாளர் இல்லாத நிலையிலும் மாணவ-மாணவியரின் ஈடுபாடு மற்றும் திறமைகளை கருத்தில் கொண்டு பள்ளியின் சார்பில் மாணர் களின் வளர்ச்சிக்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.
சிறந்த விளையாடும் திறன் கொண்ட மாணவ மாணவியரைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி கொடுத்து, அவர்களை ஊக்கப்படுத்தி, மாணாக்கரின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தி வருகிறோம். எங்கள்சி பள்ளியின் மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று அரையிறுதி வரை முன்னேறினர்… பயிற்சிகளை இன்னும் அதிகரித்தால் பல மாணாக்கரின் திறமைகள் சிறப்பாக வெளிப்படும்.