ஈரோடு: நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

Share

ஈரோடு: இன்று காலையில் நாம் தமிழர் கட்சியினர் ஈரோடு 44வது வார்டு காந்திஜி சாலை ஓடைப்பள்ள பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வந்தனர். அப்போது அப்பகுதியில் குடியிருக்கும் அருந்ததியர் சமூக மக்கள் தடுத்து நிறுத்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். சீமான் எப்படி எங்களை வந்தேறிகள் என்று சொல்லலாம் எங்களை வந்தேறிகள் என குறிப்பிட்டுவிட்டு எங்களிடம் எதற்காக ஒட்டு கேட்டு வருகிறீர்கள் என கேட்டு வாக்குவாதம் செய்தனர். சீமான் கூறிய கருத்தை திரும்ப பெறுவதுடன் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறினர்.

இதனை அடுத்து அங்கு பிரச்சாரம் செய்ய முடியாமல் நாம் தமிழர் கட்சியினர் திரும்பி சென்றனர். ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியின மக்களை ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என குறிப்பிட்டு பேசியதாக அம்மக்கள் குமுறலுடன் தெரிவித்தனர். இதற்கு அருந்ததியின மக்கள் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால் அங்கு பிரச்சாரம் செய்ய முடியாத நாம் தமிழர் கட்சியினர். திரும்பி சென்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com