ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிப்பு

Share

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வேட்பாளராக நிறுத்த கட்சி தலைவர் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். சென்னையில் 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்திய நிலையில் வேட்பாளராக இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக மறைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 7ம் தேதி வரை நடைபெறு உள்ளது. பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்திய நிலையில் வேட்பாளராக இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com